Kural 94 details

அறத்துப்பால்இல்லறவியல்இனியவைகூறல்

Virtueஇல்லறவியல்இனியவைகூறல்

Back to search

Verse

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum Inpurooum Inso Lavarkku

பொருள் (Tamil)

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு ஹநட்பில் வறுமை' எனும் துன்பமில்லை

Explanation (English)

The men of pleasant speech that gladness breathe around, Through indigence shall never sorrow's prey be found

Athigaram

இனியவை கூறல்

Section / Chapter

Section: 10.4

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை

Parimezhalagar_Urai

யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.)

M_Varadharajanar Urai

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

Solomon_Pappaiya Urai

எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.