Kural 709 details
பொருட்பால் • அமைச்சியல் • குறிப்பறிதல்
Wealth • அமைச்சியல் • குறிப்பறிதல்
Verse
வகைமை உணர்வார்ப் பெறின்.
பொருள் (Tamil)
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்
Explanation (English)
The eye speaks out the hate or friendly soul of man; To those who know the eye's swift varying moods to scan
Athigaram
குறிப்பு அறிதல்
Section / Chapter
Section: 71.9
Chapter: பொருட்பால்
Kalaingar_Urai
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள்,ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா,பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.
Parimezhalagar_Urai
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும். (இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன: வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.)
M_Varadharajanar Urai
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.
Solomon_Pappaiya Urai
அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.