Kural 70 details

அறத்துப்பால்இல்லறவியல்புதல்வரைப் பெறுதல்

Virtueஇல்லறவியல்புதல்வரைப் பெறுதல்

Back to search

Verse

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai Ennotraan Kol Enum Sol

பொருள் (Tamil)

ஹஹஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்

Explanation (English)

To sire, what best requital can by grateful child be done? To make men say, 'What merit gained the father such a son?'

Athigaram

புதல்வரைப் பெறுதல்

Section / Chapter

Section: 7.10

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

"ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு",என்று ஒரு மகன் புகழப் படுவதுதான், அவன் தன்னுடையதந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.

Parimezhalagar_Urai

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல். ('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது)

M_Varadharajanar Urai

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

Solomon_Pappaiya Urai

தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.