Kural 268 details
அறத்துப்பால் • துறவறவியல் • தவம்
Virtue • துறவறவியல் • தவம்
Verse
மன்னுயி ரெல்லாந் தொழும்.
பொருள் (Tamil)
ஹஹதனது உயிர்'' என்கிற பற்றும், ஹஹதான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்
Explanation (English)
Who gains himself in utter self-control, Him worships every other living soul
Athigaram
தவம்
Section / Chapter
Section: 27.8
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
"தனது உயிர்"என்கிற பற்றும், "தான்"என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.
Parimezhalagar_Urai
தன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும். (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.)
M_Varadharajanar Urai
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
Solomon_Pappaiya Urai
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.