Kural 189 details
அறத்துப்பால் • இல்லறவியல் • புறங்கூறாமை
Virtue • இல்லறவியல் • புறங்கூறாமை
Verse
புன்சொல் உரைப்பான் பொறை.
பொருள் (Tamil)
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை ஹஇவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது
Explanation (English)
'Tis charity, I ween, that makes the earth sustain their load Who, neighbours' absence watching, tales or slander tell abroad
Athigaram
புறம் கூறாமை
Section / Chapter
Section: 19.9
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை ‘இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.
Parimezhalagar_Urai
புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்! (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.)
M_Varadharajanar Urai
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
Solomon_Pappaiya Urai
பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!