Kural 1316 details
காமத்துப்பால் • கற்பியல் • புலவி நுணுக்கம்
Love • கற்பியல் • புலவி நுணுக்கம்
Verse
புல்லாள் புலத்தக் கனள்.
பொருள் (Tamil)
ஹஹஉன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ஹஹஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள்
Explanation (English)
'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,' She cried, and then her opened arms, Forthwith embraced me not
Athigaram
புலவி நுணுக்கம்
Section / Chapter
Section: 132.6
Chapter: காமத்துப்பால்
Kalaingar_Urai
உன்னை நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்.அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?எனக்கேட்டு ஏன் மறந்தீர்? என்று அவள் ஊடல் கொண்டாள்.
Parimezhalagar_Urai
இதுவும் அது.) உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - என, அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள்.(மற்று - வினை மாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.)
M_Varadharajanar Urai
நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
Solomon_Pappaiya Urai
எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.