Kural 1312 details

காமத்துப்பால்கற்பியல்புலவி நுணுக்கம்

Loveகற்பியல்புலவி நுணுக்கம்

Back to search

Verse

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai Neetuvaazh Kenpaak Karindhu

பொருள் (Tamil)

ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ஹஹநீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்து

Explanation (English)

One day we silent sulked; he sneezed: The reason well I knew; He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'

Athigaram

புலவி நுணுக்கம்

Section / Chapter

Section: 132.2

Chapter: காமத்துப்பால்

Kalaingar_Urai

ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து<br>அவரை "நீடுவாழ்க" என வாழ்த்துவேன் என்று நினைத்து.

Parimezhalagar_Urai

(தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி. (தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.)

M_Varadharajanar Urai

காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

Solomon_Pappaiya Urai

நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்)