Kural 1281 details
காமத்துப்பால் • கற்பியல் • புணர்ச்சிவிதும்பல்
Love • கற்பியல் • புணர்ச்சிவிதும்பல்
Verse
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
பொருள் (Tamil)
மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல் நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்
Explanation (English)
Gladness at the thought, rejoicing at the sight, Not palm-tree wine, but love, yields such delight
Athigaram
புணர்ச்சி விதும்பல்
Section / Chapter
Section: 129.1
Chapter: காமத்துப்பால்
Kalaingar_Urai
மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால், காதல் அப்படியல்ல;நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.
Parimezhalagar_Urai
(பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு.(களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.)
M_Varadharajanar Urai
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு
Solomon_Pappaiya Urai
நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.