Kural 1153 details

காமத்துப்பால்கற்பியல்பிரிவாற்றாமை

Loveகற்பியல்பிரிவாற்றாமை

Back to search

Verse

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
Aridharo Thetram Arivutaiyaar Kannum Pirivo Ritaththunmai Yaan

பொருள் (Tamil)

பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ஹஹபிரிந்திடேன்'' என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது

Explanation (English)

To trust henceforth is hard, if ever he depart, E'en he, who knows his promise and my breaking heart

Athigaram

பிரிவு ஆற்றாமை

Section / Chapter

Section: 116.3

Chapter: காமத்துப்பால்

Kalaingar_Urai

பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்து செல்ல நேரிடுவதால்; "பிரிந்திடேன்" என அவர் கூறுவதை உறுதி செய்திட இயலாது.

Parimezhalagar_Urai

(இதுவும் அது.) அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும் தேற்றம் அரிதாயிருந்தது. (அரோ: அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.)

M_Varadharajanar Urai

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

Solomon_Pappaiya Urai

எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.