Kural 101 details

அறத்துப்பால்இல்லறவியல்செய்ந்நன்றி அறிதல்

Virtueஇல்லறவியல்செய்ந்நன்றி அறிதல்

Back to search

Verse

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum Vaanakamum Aatral Aridhu

பொருள் (Tamil)

ஹஹவாராது வந்த மாமணி'' என்பதுபோல், ஹஹசெய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா

Explanation (English)

Assistance given by those who ne'er received our aid, Is debt by gift of heaven and earth but poorly paid

Athigaram

செய்ந்நன்றி அறிதல்

Section / Chapter

Section: 11.1

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

"வாராது வந்த மாமணி" என்பதுபோல், "செய்யாமற் செய்த உதவி"என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

Parimezhalagar_Urai

செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.)

M_Varadharajanar Urai

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

Solomon_Pappaiya Urai

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது