Kural 1008 details
பொருட்பால் • குடியியல் • நன்றியில்செல்வம்
Wealth • குடியியல் • நன்றியில்செல்வம்
Verse
நச்சு மரம்பழுத் தற்று.
பொருள் (Tamil)
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வௌ;வேறானவையல்ல!
Explanation (English)
When he whom no man loves exults in great prosperity, 'Tis as when fruits in midmost of the town some poisonous tree
Athigaram
நன்றி இல் செல்வம்
Section / Chapter
Section: 101.8
Chapter: பொருட்பால்
Kalaingar_Urai
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!
Parimezhalagar_Urai
நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும். ('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அண்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.)
M_Varadharajanar Urai
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.
Solomon_Pappaiya Urai
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.